தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு ரூபாய் 10000 பொங்கல் கருணைத் தொகை வழங்க அரசுக்கு கோரிக்கை!... வழங்குமா தமிழ்நாடு அரசு?
தமிழகத்தில் உள்ள அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ரூபாய் 10000 வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட சில தீர்மானங்களை முன்னிறுத்தி அரசிற்கு அரசு அலுவலர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
பொங்கல் கருணை தொகை
ஒவ்வொரு ஆண்டும் தமிழர் திருநாளான தைப் திருநாள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து நியாயவிலை கடைகளிலும் அரசு அட்டைதாரர்களுக்கு அரசு இலவச பொருட்களை வழங்குவதே வழக்கம். அதேபோல தமிழக அரசுத்துறைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் இந்த பொங்கல் பரிசு வழங்கப்பட்டு வந்தது. அதன் வகையில் வரவிருக்கும் 2022 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு அலுவலக உதவியாளர்களுக்கு ரூபாய் 10000 கருணைத் தொகை வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் சங்க ஊழியர்கள் கலந்து கொண்ட மாவட்ட பொதுக்குழு கூட்டம் கடந்த டிசம்பர் 11ஆம் தேதியன்று நடைபெற்றது. அந்த வகையில் சேலம் மாவட்ட சங்க அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் முனியப்பன் தலைமை வகித்தார். மேலும் இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட அகில இந்திய தலைவர் கணேசன் விரிவுரை ஆற்றினார்.

தொடர்ந்துவரும் 2022 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு அலுவலக உதவியாளர் அவர்களுக்கு ரூபாய் 10 ஆயிரம் கருணைத் தொகை வழங்குவது, டி பிரிவு ஊழியர்களின் ஓய்வு வயதை 62 ஆக உயர்த்துவதே, காலிப்பணியிடங்களை நிரப்புவது, சுகாதாரத்துறையில் தற்காலிக மஸ்தூர் பணியாளர்களுக்கு நிரந்தரப் பணி வழங்குவது, சிறப்பு காலமுறை ஊதியம் வழங்குவது, சரண்டர் விடுவிப்பு தொகை வழங்குவது, போன்ற பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. ஆனால் இதன் முடிவுகள் அரசின் கையில் தான்.
VIDEO LINK : https://youtu.be/NlJjNWC6h10?t=1
FOR MORE INFORMATION SUBSCRIBE TO💓
All Circular Rk
<< Home