புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை? புத்தாண்டு பரிசாக மாணவர்களுக்கு அதிர்ச்சித் தகவல் அளித்த அரசு.
புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை ஜனவரி முதல் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறப்பு.
தமிழகத்தில் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு கொண்டாட்டத்தை தடுக்கும் வகையில் டிசம்பர் 31, மற்றும் ஜனவரி 1 ஆகிய நாட்களில் அனைத்து கடற்கரைகளிலும் மக்கள் கூட தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 3, முதல் ஆறாம் வகுப்பு துவங்கி பிளஸ் டூ வரை சுழற்சிமுறை ரத்து செய்யப்பட்டு வழக்கமான நேரத்திற்கு பள்ளியில் செயல்படும என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் பண்டிகை காலங்களில் தொற்று பரவலை கட்டுப்படுத்த எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு.
1. ஊரடங்கு கட்டுப்பாடுகள் டிசம்பர் 31 வரை நீக்கப்படுகின்றன. சமூக, கலாச்சார, அரசியல் கூட்டங்கள் போன்ற நிகழ்வுகளுக்கு தடை தொடரும்.
2. தோற்று பரவால்லை கட்டுப்படுத்தும் வகையில் டிசம்பர் 31, மற்றும் ஜனவரி 1 ஆகிய நாட்களில் அனைத்து கடற்கரைகளிலும் மக்களுக்கு அனுமதி இல்லை.
3. நீச்சல் குளங்கள் செயல்படலாம் அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் அனைத்திற்கும் கூட்டங்களை பயன்படுத்தலாம்.
4. ஜனவரி 3 முதல் அனைத்து பள்ளிகளிலும் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை சுழற்சிமுறை இன்றி வழக்கமான நேரத்திற்கு செயல்படும். அனைத்து கல்லூரிகள் மற்றும் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனங்கள் இயல்பாக செயல்படும்.
5. கடைகளில் நுழைவுவாயிலில் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் வகையில் கை சுத்திகரிப்பான் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். உடல் வெப்பநிலையை பரிசோதனை கருவிகள் பரிசோதனை செய்ய வேண்டும்.
முகக் கவசம் கட்டாயம்
தொற்று பரவல் கட்டுக்குள் இருந்தாலும் அண்டை மாநிலங்களில் கரோனா வைரஸ் பரவி வருகிறது. பொது இடங்களில் முகக் கவசம் அணியாமல் இருப்பதால் தொற்று பரவல் அதிகரிக்கக் கூடும். எனவே பொதுமக்கள் அனைவரும் எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும். தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். கொரோனா கட்டுப்பாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் இவ்வாறாக முதல்வர் கூட்டத்தில் கூறியுள்ளார்.
SUBSCRIBE FOR MORE INFORMATION : All Circular Rk
YOUTUBE CHANNEL LINK :https://www.youtube.com/channel/UCY73wZhAmM9Ik3Slluk_YgA
THANK YOU FRIENDS KEEP SUPPORTING US💝

<< Home