Wednesday, 15 December 2021

பென்ஷன் தாரர்களுக்கு மிக முக்கிய தகவல். ஆயுள் சான்றிதழுடன் புதிய முக அங்கீகார தொழில் நுட்ப்பம் கொண்டு சமர்பிப்பது எப்படி?

இந்திய அரசின் ஓய்வூதியத் துறை மற்றும் ஓய்வூதியதாரர்களின் நலன் சார்ந்த இந்திய அரசின் ஆதார், டிஜிட்டல் சமர்ப்பிப்புக்கான UIDAI ஆதார் மென்பொருளின் அடிப்படையில் முக அங்கீகார நுட்பத்தின் மூலம் டிஜிட்டல் வாழ்க்கைச் சான்றிதழைச் சமர்ப்பிப்பதற்கான ஆதார்.  கீழே கொடுக்கப்பட்டுள்ள செயல்முறை ஓட்டம்:- பயன்படுத்தி மட்டும்

 



ஸ்டெப் 1:

    மேலே கொடுக்கப்பட்டுள்ள புகைப்படத்தில் உள்ள அப்ளிகேஷனை உங்களது மொபைலில் டவுன்லோட் செய்யவும். அதன் பெயர் ஆதார் ஃபேஸ் ஆர் டி உங்களது மொபைலில் உள்ள ப்ளே ஸ்டோரில் இந்த ஆப் இலவசமா பதிவிறக்கிக்கொள்ளலாம்.
.
குறிப்பு: இந்த ஆப் முழுக்க முழுக்க ஆண்ட்ராய்டு மொபைலுக்காக வடிவமைக்கப்பட்டது.

ஸ்டெப் 2:

    ஆப்பை இன்ஸ்டால் செய்த பிறகு அதன் தோற்றம் மேலே கொடுக்கப்பட்டுள்ள புகைப்படத்தில் இருப்பது போல காட்சியளிக்கும்.
 


ஸ்டெப் 3:

    ஆதார் ஃபேஸ் ஆர் டி அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்து முடித்தவுடன் அடுத்து அப்ளிகேஷனாக மேலே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் உள்ள ஜீவன் பிரமான் ஃபேஸ் ஐ டவுன்லோட் செய்யவும். மேலும் இந்த அப்ளிகேஷன் ப்ளே ஸ்டோரில் இருக்காது இதனை கூகுள் குரோமில் பதிவிறக்கம் செய்யவும்.
 

ஸ்டெப் 4:

    இதில் நீங்கள் டவுன்லோட் செய்து வைத்திருந்த ஜீவன் பிரமான் இல் கேட்கப்படும் தகவல்களை சரியாக பூர்த்தி செய்யவும். அதாவது உங்களுடைய ஈமெயில் ஐடி மற்றும் அதில் கொடுக்கப்பட்டுள்ள கேப்ட்சா வை சரியாக பூர்த்தி செய்யவும் இதனை செய்து முடித்தவுடன் உங்களது இமெயிலுக்கு ஒரு மெயில் வரும். அதனை டவுன்லோட் செய்து வைத்துக் கொள்ளவும் டவுன்லோட் செய்த பைலை இன்ஸ்டால் செய்யவும்.
 

ஸ்டெப் 5:

    அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்தவுடன் உங்களது ஆதார் ஐடி, அல்லது விர்சுவல் ஐடி கேட்கும். அதனை சரியாக பூர்த்தி செய்யவும். பின்னர் உங்களது பத்து இலக்க மொபைல் நம்பரை பூர்த்தி செய்யவும். உங்களுக்கு OTP ஒன்று வரும் அதனை சரியாக பூர்த்தி செய்யவும். பிறகு உங்களது முகத்தை ஸ்கேன் செய்யவும். இதற்குப் பிறகு கிளைன்ட் ரிஜிஸ்டர் சக்சஸ்ஃபுல் என்று திரையில் தெரியும்.
 

ஸ்டெப் 6:

1. ஆபரேட்டர் அங்கீகாரம் என்பது ஒரு முறை செயல்முறையாகும். 
2. ஓய்வூதியம் பெறுபவர் ஆபரேட்டராகவும் இருக்கலாம்.  
3.ஆபரேட்டர் அங்கீகாரத்திற்குப் பிறகு, ஓய்வூதியம் பெறுபவர் அங்கீகாரத்திற்கான திரை திறக்கும்.  
4. ஒரு ஆபரேட்டர் பல ஓய்வூதியதாரர்களின் DLC ஐ உருவாக்க முடியும்.

ஸ்டெப் 7:

பென்ஷன் பெறுபவர் உடைய அனைத்து விதமான தகவல்களையும் உள்ளீடு செய்யவும் பிறகு OTP சரியாக உள்ளீடு செய்யவும்.

ஸ்டெப் 8:

உங்களது அனைத்து விதமான தகவல்களையும் அதாவது பிபிஓ நம்பர் மற்றும் அக்கவுண்ட் நம்பர் ஆகியவைகளை தவறு இல்லாமல் உள்ளீடு செய்யவும். பிறகு கீழே உள்ள 2 சிறிய கட்டங்களுக்கும் சரி என்று டிக் அடிக்கவும். அனைத்தையும் நன்றாக படித்து பார்த்துவிட்டு டிக் கடிக்கவும். ஒரு சிறு தவறு இருந்தாலும் உங்களுடைய அப்டேஷன் கேன்சல் ஆகிவிடும் எனவே பூர்த்தி செய்யும்பொழுத கவனத்துடன் செய்யவும்.

ஸ்டெப் 9:

செக் பாக்ஸ் டைப செய்து கன்ஃபார்ம் செய்து கொள்ளவும் பிறகு ஸ்கேன் ஃபார் லைவ் போட்டோகிராபி கிளிக் செய்யவும்.

ஸ்டெப் 10

ஸ்கேன் பார் லைவ் போட்டோகிராபி கிளிக் செய்தவுடன் ஒரு பாப் அப் விண்டோ வரும் அதில் நீங்கள் உங்கள் முகத்தை ஸ்கேன் செய்ய விரும்புகிறீர்களா என்று கேட்டிருக்கும் அதற்கு எஸ் என்று பதில் அளிக்கவும்.

ஸ்டெப் 11

மீண்டும் செக் பாக்ஸ் ஐ கிளிக் செய்து தொடரவும்.

ஸ்டெப் 12

பிறகு உங்களது மொபைலின் முன்பக்க கேமரா ஓப்பன் ஆகிவிடும். அதில் உங்களது முகத்தை ஸ்கேன் செய்யவும். அதாவது மேலேயும் கீழேயும் உன் முகத்தை அசைக்காமல் சரியான வழி ஸ்கேன் செய்து கொள்ளவும்.

ஸ்டெப் 13

பேஸ் ஸ்கேனிங் முடித்தவுடன் உங்களது டி எல் சி சப்மிஷன் திரையில் தெரியும், அதோடு உங்களுடைய பிரமான் ஐடி, மற்றும் பிபிஓ நம்பர் ஆகியவை திரையில் தெரியும். இது அனைத்தையும் சரியாக செய்தால் ரிஜிஸ்ட்ரேஷன் செய்துவிடலாம் நன்றி...
 
 
 FOR MORE INFORMATION SUBSCRIBE TO: All Circular Rk 
 
All Circular RK - YouTube  
KEEP SUPPORTING FRIENDS💙...