2022ல் சம்பளம் அதிகரிக்கலாம்.. லட்சக்கணக்கான அரசு ஊழியர்களுக்கு சூப்பர் நியூஸ்..!
மத்திய அரசு ஊழியர்களின் சம்பள விகிதத்தில் அடுத்த ஆண்டு முதல் பெரியளவிலான மாற்றம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கொரோனா காரணமாக மத்திய அரசு பல லட்சம் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை நிறுத்தி வைத்துள்ளது. இந்த அகவிலைப்படியானது வரும் ஜனவரி முதல் திரும்ப கொடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா காலத்தில் அரசு ஊழியர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய கொடுப்பனவுகள் நிறுத்தப்பட்ட நிலையில், இது எப்போது வரும் என்ற பலத்த எதிர்பார்ப்பு ஊழியர்கள் மத்தியில் நிலவி வருகின்றது.
கொரோனா காலத்தில் அரசு ஊழியர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய கொடுப்பனவுகள் நிறுத்தப்பட்ட நிலையில், இது எப்போது வரும் என்ற பலத்த எதிர்பார்ப்பு ஊழியர்கள் மத்தியில் நிலவி வருகின்றது.
இது குறித்து வெளியாக தகவல்கள் வரவிருக்கும் ஆண்டு தொடக்கத்தில் டிஏ(DA) விகிதமானது மீண்டும் 3% அதிகரிக்கலாம் என கூறுகின்றது. இதன் காரணமாக மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியானது 34% ஆக அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது விரைவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரியளவில் நிவாரணத்தினை வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் அரசு 18 மாத அகவிலைப்படி நிலுவைத் தொகை குறித்தும் விரைவில் அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கிராக்கிப்படி விகிதமானது முன்னதாக 17% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் தான் இந்த விகிதம் 3% அதிகரிக்கப்பட்டது. இதற்கு ஒப்புதலும் அளிக்கப்பட்டுள்ள நிலையில், இது விகிதமானது விரைவில் ஊழியர்களுக்கு செலுத்தப்படலாம் என தெரிகிறது. அரசின் இந்த சலுகைகள் கிடைக்கும் பட்சத்தில், அரசு ஊழியர்கள் சம்பளத்தில் பெரிய ஏற்றம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
THANKS FOR READING THIS ARTICLE

<< Home