91 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி.. சூரிய குமார் யாதவ் சாதனை... இந்தியா தொடர்ந்து 11 முறை சாதனை
ராஜ்கோட் : இலங்கைக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்திய அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் வெறறி பெற்றது. இதன் முலம் தொடரை இந்திய அணி 2க்கு1 என்ற கணக்கில் வெற்றி பெற்ரது.
டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது இதில் இந்திய அணி எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தியது.தொடக்க வீரராக களமிறங்கிய இஷான் கிஷன் 1 ரன்னில் ஆட்டமிழக்க இந்தியாவுக்கு அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது.
இதனையடுத்து ராகுல் திரிபாதி அதிரடியாக விளையாடி 16 பந்துகளில் 35 ரன்களை விளாசினார். இதில் 5 பவுண்டரிகளும், 2 சிக்சர்களும் அடங்கும். இதனையடுத்து சூர்யகுமார் யாதவ் அதிரடியாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டது. 26 பந்துகளில் அரைசதம் கடந்த சூர்யகுமார் யாத்வ், பிறகு மகீஷ் தீக்சணா ஓவரில் 2 சிக்சர், பவுண்டரி அடித்து 19 ரன்கள் சேர்த்தார்.
மறுபுறம் சுப்மான் கில், ஹர்திக் பாண்டியா மற்றும் தீபக் ஹூடா ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்த தன்னுடைய 360 டிகிரி ஷாட்டை ஆடிய சூர்யகுமார் 45வது பந்தில் தனது 3வது சதத்தை பூர்த்தி செய்து அசத்தினார். இறுதியில் 51 பந்துகளில் 112 ரன்களை சூர்யகுமார் குவித்தார். அக்சர் பட்டேல் தன் பங்கிற்கு 9 பந்துகளில் 21 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் 20 ஓவர் முடிவில் இந்திய அணி 228 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
229 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியின் தொடக்க வீரர் குசேல் மெண்டிஸ் 2 சிக்சர், 2 பவுண்டரிகள் விளாசி 23 ரன்கள் எடுத்து அக்சர் பட்டேல் பந்துவீச்சில் பெவிலயன் திரும்பினார். இதன் பிறகு இலங்கை அணிக்கு சரிவு தான் தொடங்கியது. பெர்னான்டோ 1 ரன்னில் வெளியேற,நிசாங்கா 15 ரன்கள் மட்டுமே சேர்த்து ஆட்டமிழந்தார்.
தனஞ்செய்ய டி சில்வா, அசலங்கா ஆகியோர் போராடி ரன்களை சேர்த்தாலும் சாஹல் பந்துவீச்சில் முக்கிய கட்டத்தில் வெளியேறினார். இதனையடுத்து களமிறங்கிய இலங்கையின் பின்வரிசை வீரர்கள் அடுத்தடுத்து வெளியேற, இலங்கை அணி 137 ரன்களில் ஆட்டழிந்ததது. இதன் மூலம் 91 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி தொடரையும் வென்றது. இது இந்தியாவின் டி20 கிரிக்கெட்டில் 4வது மிகப் பெரிய வெற்றியாகும். ஆர்ஸ்தீப் சிங் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி கம்பேக் கொடுத்தார். டி20 கிரிக்கெட்டில் இந்திய அணி சொந்த மண்ணில் தொடர்ந்து 11வது டி20 தொடரை வென்றது.
Labels: cricket, icc, ind vs srilanka